மணவாளக்குறிச்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 98.7 சதவீதம் தேர்ச்சி பெற்றதது
07-05-2015
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டன. மணவாளக்குறிச்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் 98.7 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 77 மாணவிகள் எழுதிய தேர்வில் 76 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி சொப்னா 1110 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இவர் பாடவாரியாக தமிழ்-188, ஆங்கிலம்-173, இயற்பியல்-194, வேதியியல்-188, உயிரியல்-172, கணிதம்-195 மதிப்பெண்கள் பெற்றார்.
![]() |
சொப்னா, ரித்திகா தேவி |
மாணவி ரித்திகா தேவி 1065 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-173, ஆங்கிலம்-164, இயற்பியல்-179, வேதியியல்-186, உயிரியல்-164, கணிதம்-199 ஆகிய மதிப்பெண்கள் பெற்றார். 1042 மதிப்பெண்கள் பெற்று மாணவி பேபி ஷாமிலி 3-ம் இடத்தை பெற்றார்.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் மேசியா தாஸ், உதவி தலைமையாசிரியர் எல்வி ஆகியோர் பாராட்டினர்.
Tags:
Manavai News