நாகர்கோவிலில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது
31-03-2015
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் முப்பெரும் விழா நேற்று முன்தினம் (29-ம் தேதி) மாலை 5 மணி அளவில் நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் டாக்டர் தினகரன் எழுச்சியுரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு கோட்டார் தலித் பணிக்குழு செயலாளர் அருள் ஆனந்த், அகிலபாரத பிராமணர் சங்க தேசிய தலைவர் சங்கரநாராயணன், திமுக தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் மதியழகன், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, இளைஞர் காங்கிரஸ் துணை செயலாளர் செல்வகுமார், நாவலாசிரியர் மீரான் மைதீன், எஸ்டிபிஐ மாவட்ட துணை தலைவர் ஜாஹிர் உசேன் எழுத்தாளர் நாவல்காந்தி, லாயம் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் தொண்டரணி மாநில செயலாளர் ராஜன் நன்றியுரை வழங்கினார். முன்னதாக வடசேரி சந்திப்பு பகுதியில் உள்ள அய்யன் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தி மற்றும் போட்டோஸ்
புதியபுயல் முருகன்
மணவாளக்குறிச்சி
Tags:
குமரிமாவட்ட செய்திகள்