மணவாளக்குறிச்சி செவ்வாடை பக்தர்கள் இருமுடி கட்டி சென்றனர்
31-01-2015
மணவாளக்குறிச்சி தருவை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின், 30-வது ஆண்டு வருட தைப்பூச இருமுடி கட்டு நடந்தது. இதில் 300 செவ்வாடை பக்தர்கள் இருமுடி கட்டி, அங்கு இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
மணவாளக்குறிச்சி சந்திப்பு யானை வரவழைத்த பிள்ளையார்கோவிலில் தேங்காய் உடைத்து தீபாராதனை நடந்தது. பின்னர் அனைவரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக மேல்மருவத்தூர் புறப்பட்டு சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மன்ற தலைவர் ராஜேந்திரன், மகளிர் அணித்தலைவி வசந்தா ராஜேந்திரன், செயலாளர் நாகராஜன், முருகேசன், பொருளாளர் ஜெகதீஸ்வரி மற்றும் செவ்வாடை பக்தர்கள் செய்திருந்தனர்.