மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: திரளாக மக்கள் கலந்து கொண்டனர்
27-01-2015
மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது . திருவிழா இன்று முதல் தொடங்கி பிப்ரவரி 8-ம் தேதி வரை நடக்கிறது.
முதல் நாள் விழாவான இன்று மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை மற்றும் நவநாள் நிகழ்ச்சியும், தொடர்ந்து குளச்சல் மறைவட்ட முதன்மை அருட்தந்தை உபால்டு தலைமையில் திருப்பலியும், கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இரவு 8.30 மணிக்கு கைரளி, ஏசியாநெட் புகழ் பாடல் குழுவினரின் மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:
Manavai News