மணவாளக்குறிச்சி பகுதியில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது
06-12-2014
கார்த்திக்கை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மணவாளக்குறிச்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் கோலம் இடப்பட்டு, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அனைத்து வீடுகளிலும் கொழுக்கட்டை பூஜைக்கு வைக்கப்பட்டது. ஆசாரிதெரு, வடக்கன்பாகம், தருவை, பிள்ளையார்கோவில் உள்பட பல பகுதிகளில் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
Tags:
Manavai News