மணவாளக்குறிச்சி – திங்கள்நகர் சாலையை செப்பனிடக் கோரி இளைஞர் காங்கிரசார் சாகும்வரை உண்ணாவிரதம்

மணவாளக்குறிச்சி – திங்கள்நகர் சாலையை செப்பனிடக் கோரி இளைஞர் காங்கிரசார் சாகும்வரை உண்ணாவிரதம்
06-12-2014
மணவாளக்குறிச்சியில் இருந்து சேரமங்கலம், அழகன்பாறை, மாங்குழி வழியாக திங்கள்நகர் செல்லும் சாலை பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் கிடக்கிறது. இந்த சாலையை செப்பனிடக் கேட்டு பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை சாலை சீரமைக்கப்பட வில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்கக்கோரி திங்கள்நகர் பாகோடு சந்திப்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கினர்.

குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் லாரன்ஸ், பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெமின்ஸ், கவுன்சிலர் ஜேக்கப், வட்டார தலைவர்கள் ஜெரால்டு கென்னடி, சேவியர் சுந்தர்ராஜ், ஜாண் மில்டன், பீட்டர் தாஸ், எட்வின் ஜோஸ், கிறிஸ்டல் ஜெனித், ராப்சன், சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பாலையா, அசோகன், சாலமன், சுசிலா ஸ்டாரி, ஆஸ்கர் பிரடி, ஷர்மிளா, ஏஞ்சல், சாலேடின், சுலைமான், மதியழகன், மூர்த்தி, ஜெயச்சந்திரன், தேவதாசன், பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நேற்று இரவு வரை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் விடிய, விடிய தொடர்ந்து நடந்தது.

Post a Comment

Previous News Next News