மணவாளக்குறிச்சியில் தீவிரவாதத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பிரச்சாரம்
16-11-2014
தமிழ்நாடு முழுவதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி மாலையில் மணவாளக்குறிச்சி சந்திப்பில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது என்பதன் அடிப்படையில் பிரச்சாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அப்துல் ஜலீல், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் காஜா நூஹ், முஹம்மது நிசார், அஹமது, அஸ்ரப், நவாஸ் உள்பட தவ்ஹீத் ஜமாஅத் அமைபினர் பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Manavai News