மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை ஆசிரமத்தில் சுவாமிகளை, பா.ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்து ஆசி பெற்றார்
04-11-2014
மணவாளக்குறிச்சி அருகே வெள்ளிமலையில் உள்ள ஆசிரமத்துக்கு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று வந்தார். அங்கு சுவாமி சைதன்யமகாராஜை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின்னர் அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். கைது செய்யப்பட்டும், கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டும் சித்ரவதைக்கு ஆளானார்கள். மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த நிலை மாறியது.
இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இப்போது இலங்கை கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட மீனவர்களையும் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வக்கீல்கள் குழு இலங்கை சென்று அவர்களை மீட்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மீனவர்கள் நிச்சயம் மீட்கப்படுவார்கள்.
காங்கிரஸ் ஆட்சியின்போது பொருளாதாரம் சீர்குலைந்து கிடந்தது. அதனை மோடி அரசு பதவிக்கு வந்ததும் படிப்படியாக சீரமைத்து வருகிறது. விலைவாசி குறைவுக்கு வழிவகுத்துள்ளது. பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட்வதேரா பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்