அம்மாண்டிவிளை சந்திப்பில் பா.ஜனதா சார்பில் மாலை நேர தர்ணா நடந்தது
10-07-2014
மணவாளக்குறிச்சி அருகில் உள்ள அம்மாண்டிவிளை சந்திப்பு பகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாலை நேர தர்ணா நேற்று (09-ம் தேதி) மாலை 4.30 மணி அளவில் நடந்தது.
இந்த தர்ணா போராட்டத்திற்கு குமரி மாவட்ட பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை தாங்கினார். போராட்டத்தில், வெள்ளிமலை பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் செய்யாமல் இருப்பதை கண்டித்தும், பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க வற்புறுத்தியும், புதிய கிராம நிர்வாக அலுவலகத்தை சாத்தான்விளை பகுதியில் அமைக்க வேண்டியும் என்பவ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
மாலை நேர தர்ணா போராட்டத்தில் வெள்ளிமலை மற்றும் மணவாளக்குறிச்சி பேரூர் பகுதிகளை சேர்ந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்