மண்டைக்காடு ஏ.எம்.கே. மறுவாழ்வு மையத்துக்கு விருது
20-09-2014
நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் மண்டைக்காடு ஏ.எம்.கே. மது போதை மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இம்மையம் 1995 ஆம் ஆண்டுமுதல் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தி வருகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றுள்ளனர். மேலும், பள்ளி, கல்லூரிகளில் இம்மையம் சார்பில் மதுபோதை பழக்கம் தீமை குறித்து விழிப்புணர்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த சேவையை பாராட்டி தேசிய குழந்தைகள் உழைப்பு எதிர்ப்பு பிரசார அமைப்பு சார்பில், அமைப்பாளர் ஜோசப் விக்டர் மற்றும் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இணைந்து சிறப்பு விருதை வழங்கினர். விருதை மறுவாழ்வு மைய இயக்குநர் அருள்கண்ணன் பெற்றார். இதில், டாக்டர் ஜாக்சன், ஐ.ஒ.பி. ஊரக வளர்ச்சி அதிகாரி ராதாகிருஷ்ணன், சமூக சேவகர் சிலுவை வஸ்தியான், நயினார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்