மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
13-09-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நேற்று நடந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா கடந்த வியாழக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மதியம் சிறப்பு பூஜையும், மாலையில் சுமங்கலி பூஜையும் நடந்தது.
நேற்று காலை சிறப்பு பூஜையும், சிங்காரி மேளமும், மதியம் ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி, துணைத்தலைவர் ஜெகன் சந்திரகுமார், செயல் அலுவலர் ஜெயமாலினி, வார்டு உறுப்பினர்கள் ராஜசேகரன், கல்யாண குமார், கமலா, பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், ஹைந்தவ இந்து சேவா சங்க பொதுச்செயலாளர் ரெத்தின பாண்டியன், பொருளாளர் முருகன், ஸ்ரீதேவி கலா மன்ற தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதியம் 1 மணிக்கு தீபாராதனையும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலையில் சிறப்பு பூஜையும், இரவு 8.30 மணிக்கு அத்தாள பூஜையும் நடைபெற்றது. 
இன்று (13-09-2014) காலை சிறப்பு பூஜையும், தீபாராதனையும், மதியம் சிறப்பு பூஜையும், மாலை திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு தேவசம் மேல்நிலைப்பள்ளியில் 10-வது மற்றும் 12-வது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.


Photos
Puthiyapuyal Murugan
Manavalakurichi

Post a Comment

Previous News Next News