மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ம் தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா

மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ம் தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
08-09-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா வருகிற 11–ம் தேதி தொடங்கி 13–ம் தேதி வரை நடக்கிறது. வருகிற 11–ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு தீபாராதனையும், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜையும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அத்தாள பூஜையும் நடக்கிறது.

12–ம் தேதி காலையில் தீபாராதனையும், 9 மணிக்கு சிங்காரி மேளமும், காலை 10 மணிக்கு ஆவணி அஸ்வதி பொங்கலும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 1.30 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு பஜனையும் நடக்கிறது.
13–ம் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு மண்டைக்காடு தேவஸ்வம் பள்ளியில் 10 மற்றும் 12–வது வகுப்பில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.

Post a Comment

Previous News Next News