மணவாளக்குறிச்சி சாலையை சீரமைக்க பா.ஜனதா கோரிக்கை
26-08-2014
மணவாளக்குறிச்சி பா.ஜனதா பேரூர் தலைவர் கார்த்திகேயன் கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியியாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது-
மணவாளக்குறிச்சி வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் குடிநீர் குழாய் பராமரிப்பின் காரணமாகவும், மழையின் காரணமாகவும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் வருகிற 31-ம் தேதி வித்யா ஜோதி பட்டமளிப்பு என்னும் நிகழ்ச்சி கூட்டுமங்கலத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார்கோவிலில் இருந்து ஊர்வலமாக செல்வார்கள்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்க தேசியத்தலைவர்கள் மற்றும் துறவிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே இதனை கவனத்தில் கொண்டு அந்த சாலையை விரைந்து செப்பனிட ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Manavai News