மண்டைக்காடு கடலில் மூழ்கிய தொழிலாளி சாவு

மண்டைக்காடு கடலில் மூழ்கிய தொழிலாளி சாவு
03-07-2014
இரணியல் அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு கடலுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார்.

கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீர் என்று மகேஷ் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினார். உடனே அவரது நண்பர்கள் கூச்சல் போட்டனர்.

இதை பார்த்த அந்த பகுதியில் நின்ற மீனவர்கள் கடலில் குதித்து மகேசை காப்பாற்றினார்கள். அவரது நிலை கவலைக் கிடமாக இருந்ததால் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மகேஷ் நேற்று காலை பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி இரணியல் போலீசுக்கு குளச்சல் கடலோர காவல் படையினர் தகவல் தெரிவித்தனர். கடலில் மூழ்கி தொழிலாளி மகேஷ் பலியானது பற்றி இரணியல் போலீசாரும் குளச்சல் கடலோர காவல் படையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

Previous News Next News