மணவாளக்குறிச்சி பகுதியில் இடிக்க தயாராகும் கடைகள்

மணவாளக்குறிச்சி பகுதியில் இடிக்க தயாராகும் கடைகள்
05-06-2014
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக அழகிய, வளர்ந்து வரும் ஊர் (தேர்வுநிலை பேரூராட்சி) மணவாளக்குறிச்சி என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் அனைத்து சமுதாய மக்களையும் தன்னுள் கொண்டுள்ளதுடன், அவர்கள் சாதி, மத பேதமில்லாமல் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் அனைத்தையும் வாங்கும் இடமாகவும் விளங்குகிறது. மேலும் கடியப்பட்டணம், முட்டம், அம்மாண்டிவிளை, வெள்ளிசந்தை, மண்டைக்காடு, சேரமங்கலம் ஆகிய பகுதிகளின் முக்கிய நகர் போன்ற இடமுமாகும். மேலும் இந்திய அளவில் இருமுறை சிறந்த கிராமம் என்ற அந்தஸ்தையும் பெற்ற ஊராகும்.
மணவாளக்குறிச்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் பழைய ஓட்டுக் கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. தற்போது பல இடிக்கப்பட்டு மாடி கட்டிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பல புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. உதாரணமாக அலி டாக்கீஸ் காம்பவுண்ட் பகுதியில் (வங்கி மற்றும் கடைகள்)  பெரிய அளவிலான பில்டிங் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் கடைகள் (சார்லஸ் ஸ்டோர், சுக்கூர் மீன் வலைக்கடை, பழைய சஜ்ஜார் மளிகை ஸ்டோர் (சஜ்ஜார் லக்கி சென்டர்)) ஆகியவை மிக பழமையான கட்டிடங்களாகும். இந்த கடைகளுக்கு அருகில் உள்ள கடைகள் மாடி கட்டிடங்களாக கட்டப்பட்டுவிட்டன.
ஓரிரு நாட்களில் இடிக்கப்பட இருக்கும் கடைகள்
தற்போது மேற்படி கடைகளில் இருந்தவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டனர். இந்த கடைகள் ஓரிரு நாட்களில் இடிக்கப்படும் எனத்தெரிகிறது. பின்னர் இந்த இடத்தில் புதிய பொலிவுடன் மாடிக்கட்டிடம் கட்டப்படுகிறது. இன்னும் ஒருசில கடைகள் மட்டுமே பழைய கட்டிடத்தில் இயங்கி வருவதாக தெரிகிறது. அதுவும் மாடி கட்டிடங்களாக மாற்றப்படும் போது மணவாளக்குறிச்சி பகுதி இன்னும் நவீனதன்மை பெறும். தற்போது மணவாளக்குறிச்சி பஜார் தருவையில் இருந்து மணவாளக்குறிச்சி பாலம் வரை நீண்டு சென்றுள்ளது.

Post a Comment

Previous News Next News