உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
28-06-2014
உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி நேற்று மண்டைக்காடு ஏ.எம்.கே. மது, போதை மருத்துவ சிகிச்சை மறுவாழ்வு மையமும், இந்திய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மண்டைக்காடு மது, போதை மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்கண்ணன் முன்னிலை வகித்தார். சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினார். எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரீடா மில்ரெட் கோல்டி வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மகளிர் கோர்ட்டு நீதிபதி முத்துசாரதா கலந்து கொண்டு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கையேடு மற்றும் ஸ்டிக்கர்களை வெளியிட்டார். மேலும் மாவட்டத்தில் போதை எதிர்ப்பு தொடர்பான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும், மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன், சமுதாய அளவில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மேற்கொண்ட ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் அருள் பிரகாஷ் உள்ளிட்டோருக்கு அறிவுசார் விருதுகளையும் நீதிபதி முத்துசாரதா வழங்கினார்.

பின்னர் நீதிபதி முத்துசாரதா தலைமையில் போதை எதிர்ப்பு உறுதிமொழியை மாணவ- மாணவிகள் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை நுண்ணறிவு அதிகாரி சையது சாரிக் உமர், மதுவிலக்கு அமல் பிரிவு துணை சூப்பிரண்டு சங்கரேஸ்வரன், ஏ.எம்.கே. நிறுவன இயக்குனர் அருள்ஜோதி, திட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பாவதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News