இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து சென்ற மணவாளக்குறிச்சி சின்னவிளை மீனவர்கள் 2 பேரின் வீட்டிற்கு சென்று திமுகவினர் ஆறுதல்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து சென்ற மணவாளக்குறிச்சி சின்னவிளை மீனவர்கள் 2 பேரின் வீட்டிற்கு சென்று திமுகவினர் ஆறுதல்
27-06-2014
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைபட்டினத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதில் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியில் உள்ள ஆல்பர்ட் ராஜன் (வயது 42) மற்றும் கிங்சன் பிரசஸ் (வயது 30) ஆகிய இருவரும் அடங்குவர். அவர்களை கடற்படையினர் இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இதனால் சின்னவிளை பகுதி மீனவர்களின் குடும்பத்தார்கள் மிகுந்த சோகத்துடன் காணப்படுகின்றனர். இதனை அறிந்த குமரி மாவட்ட முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் முன்னாள் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் வீட்டிற்கு சென்று, அவர்களின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினர். இதில் எப்.எப்.ராஜரெத்தினம், மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளர் குட்டிராஜன், இஸ்தோர், வெள்ளிமலை பேரூர் ரவிசந்திரன், தங்கராஜ், சுபாஷ் உள்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News