ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
25-05-2014
பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், ராஜபக்சே இந்தியா வரக்கூடாது என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன், வடக்கு மாவட்ட செயலாளர் அஜீத் மற்றும் நிர்வாகிகள் ஜான்சன் சேவியர்ராஜ், மரிய சந்திரன், சுரேஷ், வினோத், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
District News