மணவாளக்குறிச்சி கல்லடிவிளை ஸ்ரீஆற்றுமாடன் தம்புரான் கோவிலுக்கு யானைகள் மீது சந்தனகுடம், பால்குடம், செண்டைமேளங்கள், தப்பாட்டம் முழங்க மாபெரும் ஊர்வலம்
08-05-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லடிவிளை இந்து ஊராளி சமுதாய அருள்மிகு ஸ்ரீஆற்றுமாடன் தம்புரான் திருக்கோவில் சித்திரை திருவிழா 6-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி (சித்திரை 23 முதல் 27 முடிய) வரை நடக்கிறது. முதல் நாள் விழாவில்நாகர்கோவில் கலக்கல் ஸ்ருதியின் மாபெரும் மெல்லிசை விருந்தும், 2-ம் நாள் விழாவில் திருவனந்தபுரம் கான கைரளி கான மேளா குழுவினரின் மாபெரும் இன்னிசை விருந்தும் நடைபெற்றது.
3-ம் நாள் திருவிழாவான இன்று மதியம் 2.30 மணியளவில் சேரமங்கலம் அருள்மிகு தென்திருவரங்கத்து ஸ்ரீஆழ்வார் சுவாமி திருக்கோவிலில் இருந்து யானைகள் மீது சந்தனகுடம், பால்குடம், நாதஸ்வரம் செண்டைமேளம், பஞ்சவாத்தியம், தப்பாட்டம், விளக்குகெட்டு, சிங்காரிமேளம், சிவபார்வதி நடனத்துடன் ஊர்வலம் புறப்பட்டு பிள்ளையார்கோவில், மணவாளக்குறிச்சி சந்திப்பு வந்து அடம்புவிளை அருள்மிகு உச்சினி மாகாளி அம்மன்கோவில் சென்று களபம் எடுத்து அருள்மிகு ஸ்ரீதம்புரான் சன்னதி சென்றது.
இந்த மாபெரும் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
போட்டோஸ்
புதியபுயல் முருகன்
Tags:
Manavai News