மணவாளக்குறிச்சி ஆண்டார்விளைதெரு முத்தாரம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது

மணவாளக்குறிச்சி ஆண்டார்விளைதெரு முத்தாரம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
08-05-2014
மணவாளக்குறிச்சி ஆண்டார்விளைதெரு அருள்மிகு தேவி முத்தாரம்மன் திருக்கோவில் திருவிழா 4-ம் தேதி முதல் 6-ம் தேதி (சித்திரை 21 முதல் 23 முடிய) வரை நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு சமய வகுப்பு மாணவ, மாணவிகளின் பாட்டுப்போட்டி, பேச்சுபோட்டி, வினாடிவினா போட்டிகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையும், இரவு 7 மணிக்கு மாபெரும் நகைச்சுவை திரை இசை பட்டிமன்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
5-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் காலை 8 மணிக்கு சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகளும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுசெயலாளர் மிசா சோமன் தலைமையில் சொற்பொழிவும் நடைபெற்றது.
6-ம் தேதி நடைபெற்ற விழாவில் காலை 8 மணிக்கு நாதஸ்வர நையாண்டி மேளமும், 8.30 மணிக்கு கொட்டாரம் சாரதா ஜெயக்குமார் குழுவினரின் வில்லிசையும் நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் மஞ்சள்பால் நீராடுதல், இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. திருவிழா நிகழ்வுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
புதியபுயல் முருகன்

Post a Comment

Previous News Next News