மணவாளக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கி மாணவர் பலி

மணவாளக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கி மாணவர் பலி
21-05-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மண்டைக்காடு கூத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஜெனீஷ் (வயது 18). நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று மணவாளக்குறிச்சி பெரியகுளம் பகுதியில் உள்ள எழுத்திட்டான்பாறை குளத்தில் குளிப்பதற்காக சென்றார்.

குளித்துகொண்டிருக்கும் போது திடீரென ஜெனீசை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனீசின் நண்பர்கள் குளத்திற்குள் தேடினர். ஆனால் அவர்களால் ஜெனீஷை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கும், குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அதிகாரி ஸ்ரீகுமாரன் நாயர் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து குளத்திற்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் ஜெனீஷை பிணமாக மீட்டனர். தொடர்ந்து அவரது பிணத்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous News Next News