மணவாளக்குறிச்சியில் மலர் மகளிர் சுயஉதவி குழுக்களின் 14-வது பஞ்சாயத்து மாநாடு நடைபெற்றது
21-05-2014
மணவாளக்குறிச்சியில் மலர் மகளிர் சுயஉதவி குழுக்களின் 14-வது பஞ்சாயத்து மாநாடு கே.எஸ்.வி. திருமண மண்டபத்தில் வைத்து நேற்று (20-ம் தேதி) மாலை 3 மணி அளவில் துவங்கியது.
நிகழ்ச்சியில் முதலாவதாக குத்து விளகேற்றப்பட்டது. தொடர்ந்து கிராம ஒருங்கிணைப்பாளர் தேவி வரவேற்புரை வழங்கினார். குழு உறுப்பினர் ராஜேஸ்வரி உறுதிமொழியும், ஒருங்கிணைப்பாளர் லதா தலைவர் உரையும், ராமலெட்சுமி அறிக்கை வாசித்தாலும், மலர் மாவட்ட தலைவர் செலின் மேரி துவக்க உரையும் வழங்கினார்.
மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.எம்.பஷீர் சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து மலர் மாவட்ட பொருளாளர் புஷ்பலதா, ஒன்றிய பொறுப்பாளர் ஜெனட், ரமா, கவிதா, சுஜாதா, கல்லை அன்சாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு சிறப்புரைகள் பேசப்பட்டன. இடையிடையே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர் குழுக்களுக்கு தேநீர் வழங்கப்பட்டன.
Photos: "Puthiya Puyal" Murugan
Tags:
Manavai News