கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி 
17-05-2014
பாராளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜாண்தங்கம், தி.மு.க. வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினம் உள்பட 24 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி ஓட்டுகளும் ஒரே நேரத்தில் பகுதி பகுதியாக எண்ணப்பட்டன. இதன்படி வாக்கு எண்ணிக்கை 29 சுற்றுகளாக நடந்தது. தொடக்கத்தில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இழுபறியான நிலையில் வாக்குகளின் எண்ணிக்கை இருந்தது. ஆனால் போகப்போக பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை அடைந்தார்.

இறுதியில் அவர் 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட எச்.வசந்தகுமார் 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 ஓட்டுகள் பெற்றுள்ளார். இவரை பொன்.ராதாகிருஷ்ணன் 1 லட்சத்து 28 ஆயிரத்து 662 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:–

மொத்த வாக்குகள் – 14,67,796
பதிவானவை – 9,92,179
1. பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா) – 3,72,906
2. எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) – 2,44,244
3. டி.ஜாண்தங்கம் (அ.தி.மு.க.) – 1,76,239
4. எப்.எம்.ராஜரத்தினம் (தி.மு.க.) – 1,17,933
5. ஏ.வி.பெல்லார்மின் (மா.கம்யூ) – 85,284
6. எஸ்.பி.உதயகுமார் (ஆம்ஆத்மி) – 15,314
7. நோட்டா – 4,150
(தி.மு.க., மா.கம்யூ., ஆம் ஆத்மி, பகுஜன்சமாஜ் ஆகிய 4 கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 22 பேர் டெபாசிட் இழந்தனர்.)

Post a Comment

Previous News Next News