மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது
11-03-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலில் மாசிக்கொடை விழா நடைபெற்று வருகிறது. 9-ம் திருவிழாவான நேற்று பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் ஸ்ரீகண்டன் சாஸ்தா ஆலயத்தில் இருந்து சந்தனகுடம் மற்றும் காவடி ஊர்வலம் வந்தது. 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 9.30 மணிக்கு யானை மீது களப பவனி வருதலும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் மற்றும் அலங்கார பவனி வருதல் ஆகியவை நடைபெற்றது.
சமய மாநாடு பந்தல் நிகழ்ச்சியில் மாலை 6 மணி முதல் சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 10.30 மணிக்கு குமரி ரெத்ன பிரியா பக்தி இசைக்குழு வழங்கிய சிந்தனை சிரிப்பு பக்தி இன்னிசை பாட்டுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்