மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.35½ லட்சம் செலவில் கலசாபிஷேக திருப்பணி

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.35½ லட்சம் செலவில் கலசாபிஷேக திருப்பணி
03-02-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷே திருப்பணி நடைபெறுகிறது. இதற்கான முதல் கட்ட பணிக்காக ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.28 லட்சம் ராஜகோபுரம், மூன்று நிலை சாலகரம், ரூ.1 லட்சம் செலவில் திருவிளக்கு பூஜை மண்டபம் சீரமைத்தல், ரூ.5 லட்சம் செலவில் மடப்பள்ளியும் சீரமைக்கப்படுகிறது.

மேலும் கலையரங்கம் கட்டுவதற்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் பச்சைமால் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன், துணை தலைவர் ஜெகன் சந்திரகுமார், பத்மநாபபுரம் நகரசபை தலைவி சத்யாதேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்புளிகலா, வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் ரெத்தின பாண்டியன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News