மணவாளக்குறிச்சி பாறாவிளை ஹிந்து நாடார் சமுதாயம் சார்பில்
பொங்கல் விழா நடந்தது
18-01-2014
மணவாளக்குறிச்சி பாறாவிளை ஹிந்து நாடார் சமுதாய17-வது ஆண்டு விழா மற்றும் பொங்கல் திருவிழா 14, 15 தேதிகளில் நடந்தது.
14-ம் தேதி பொங்கல் அன்று காலை 8 மணிக்கு பொங்கல் வழிபாடு, 10 மணிக்கு சமயவகுப்பு மாணவ, மாணவிகளின் வினாடி வினா போட்டி, நண்பகல் 2 மணிக்கு சிறுவர், சிறுமியரின் விளையாட்டு போட்டிகள், மாலை 4 மணிக்கு பெண்களுக்கான வடம் இழுத்தல் போட்டி,5.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், இரவு 7.30 மணிக்கு அகிலராகம் கலைக்குழுவினரின் நகைச்சுவை பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
15-ம் தேதி உழவர் திருநாளன்று காலை 10 மணிக்கு வழுக்குமர போட்டி, 11 மணிக்கு கபடி போட்டி, மாலை 3 மணிக்கு உறியடி போட்டி, இரவு 7 மணிக்கு பரிசு வழங்குதல், இரவு 8 மணிக்கு ராகசுரபி திரைப்பட மெல்லிசை குழுவினரின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.
பொங்கல் விழா நிகழ்ச்சிகளை மணவாளக்குறிச்சி பாறாவிளை ஹிந்து நாடார் சமுதாய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
புதியபுயல் முருகன்
Tags:
மணவை செய்திகள்