மணவாளக்குறிச்சி அருகே குளத்தில் குதித்த கல்லூரி மாணவர் பலி
18-01-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிசந்தை ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் சுபாஷ் (வயது 19). நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றார்.
அப்போது சுபாஷ், நண்பர்களுடன் குளத்தின் அருகில் பேசிக்கொண்டு இருந்தனர்.அப்போது இரணியல் மதுவிலக்கு போலீசார் திருட்டு தனமாக மதுவிற்பனை நடக்கிறதா? என கண்காணித்து அந்த பகுதிக்கு வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். சுபாஷ் உடனடியாக குளத்தில் குதித்து மறுகரைக்கு நீந்தி சென்றுள்ளார்.அப்போது குளத்தில் கிடந்த பாசியில் சிக்கி கொண்ட சுபாஷ் கறையேற முடியாமல் தத்தளித்துள்ளார்.இதை பார்த்த சக நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். முடியாமல் போகவே தீயணைப்பு மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தீயணைப்பு படையினரும், ஆம்புலன்ஸ் குழுவினரும் விரைந்து வந்து குளத்திற்குள் இறங்கி சுபாஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்டு குளத்தின் கரைக்கு கொண்டுவந்தனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்