மணவாளக்குறிச்சியில்
பா.ஜனதா கட்சியினர் கொண்டாட்டம்
10-12-2013
பா.ஜனதா கட்சி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் டெல்லி ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து மணவாளக்குறிச்சி பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், மணவாளக்குறிச்சி பேரூர் தலைவர் கார்த்திகேயன், இளைஞர் அணி தலைவர் சஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
மணவை செய்திகள்



