மணவாளக்குறிச்சி, ஆறான்விளை சாலையில் பாதாள மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு

மணவாளக்குறிச்சி, ஆறான்விளை சாலையில்
பாதாள மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு
10-12-2013
மணவாளக்குறிச்சி பள்ளிவாசல் அருகில் பள்ளிதெரு, ஆறான்விளை, காந்தாரிவிளை, கோவில்விளாகம், சகாயமாதா காலனி ஆகிய பகுதிகளுக்கு செல்ல சாலை உள்ளது. இந்த சாலை மழை காலங்களில் மழை நீரால் நிரம்பி குளம்போல் காட்சியளிக்கும். இதனால் இந்த சாலை வழியே செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டது.
சாலையில் மழைநீர் தொட்டிக்கான இடம்
தோண்டப்பட்டுள்ளதை காணலாம் 
எனவே, இந்த சாலையில் மழைநீர் அதிக அளவில் தேங்கும் பகுதிகளில் பாதாள மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க மணவாளக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து சாலையில் பள்ளிதெரு செல்லும் பகுதியிலும், காந்தாரிவிளை செல்லும் பகுதியிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியானது ஒருசில நாட்களில் முடியும் எனத்தெரிகிறது.

Post a Comment

Previous News Next News