மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடற்கரை சாலை கடல் அரிப்பால் சேதம்

மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடற்கரை சாலை 
கடல் அரிப்பால் சேதம்
17-11-2013
மணவாளக்குறிச்சி சந்திப்பில் இருந்து சின்னவிளை கிராமத்திற்கு சாலை செல்கிறது. இந்த சாலையின் பக்க சாலையாக பாபுஜி மேல்நிலை பள்ளி அருகில் கடற்கரைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை கடற்கரை வழியாக சென்று கடியப்பட்டணம் பகுதியில் வள்ளியாறு கடலில் கலக்கும் பகுதி வரை செல்கிறது.
சேதமடைந்த கடற்கரை சாலை 
இந்த சாலையை கடற்கரைக்கு செல்பவர்களும், கடியப்பட்டணம் பகுதிக்கு செல்பவர்களும் பயன்படுத்துகின்றனர். வள்ளியாற்றில் தண்ணீர் குறைவாக செல்லும் வேளைகளில் கடியப்பட்டணம் பகுதி மக்கள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். கடந்த சில வாரங்களாக கடுமையாக கடல் சீற்றம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கடல் நீர் சாலையை கடந்து நிலப்பரப்பிற்கு வந்தது. தொடர்ந்து அடித்த கடல் அலையினால் சாலையின் கீழ்பகுதி அரிப்பு ஏற்பட்டு, சாலை இரண்டாக பிளந்து, ஒரு பகுதி பள்ளத்தில் விழுந்தது. சேதம் அடைந்துள்ள சாலையில் பொதுமக்கள், மிக எச்சரிக்கையுடன் நடந்து செல்கின்றனர்.

Post a Comment

Previous News Next News