கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில்
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
17-10-2013
இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகை நேற்று (16-10-2013) கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது.
பக்ரீத் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் இடலாக்குடி, கோட்டார், மணவாளக்குறிச்சி, குளச்சல், தக்கலை, திருவிதாங்கோடு, ஆளூர், இரவிபுதூர்கடை, மாதவலாயம், தேங்காய்பட்டணம், குலசேகரம் உள்ளிட்ட ஊர்களில் காலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெண்களுக்கும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகைக்கு பின்னர் குர்பானி வழங்கப்பட்டது. குளச்சல் உள்ளிட்ட சில இடங்களில் குர்பானிக்காக ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து, ஏழை, எளியோருக்கு விருந்து அளித்து, அன்பளிப்பு கொடுத்து உபசரித்தனர்.

Post a Comment

Previous News Next News