திருச்செந்தூரில் புதியபுயல் பத்திரிகையின் சாதனையாளர் மற்றும் சமூக ஆர்வலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது

திருச்செந்தூரில் புதியபுயல் பத்திரிகையின் சாதனையாளர் 
மற்றும் சமூக ஆர்வலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது
22-09-2013
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து வெளிவரும் சமூக விழிப்புணர்வு மாதஇதழ் மாநில அளவில் பல்வேறு சாதனைகள் புரிபவர்களையும், சமூக ஆர்வலர்களையும் கண்டு அவர்களுக்கு மகாத்மா காந்தி விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன்படி நேற்று (21-09-2013) மாலை 4 மணி அளவில் திருச்செந்தூர் முருகன் கோவில் அருகில் புளியடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சாலியர் வகையார் கலையரங்கத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடைபெற்றது.
புதியபுயல் ஆசிரியர் ஆறுமுகம் பேசிய காட்சி
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் சுரேஷ்பாபு, கோவில்பட்டி விவேகானந்தா யோகா மைய சுரேஷ்குமார், திருச்செந்தூர் வழக்கறிஞர் திலீப்குமார், சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் காமராஜ், சுதர்சன், திருமலைசாமி, பாண்டிசேரி பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை சிறுவர் ஊழியர் நோவா கோயில்பிள்ளை உட்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்டனர்.
இளம் சமூக ஆர்வலர் குமாருக்கு கோவிந்தம்மாள்
பெண்கள் கலைக்கல்லூரி செயலர்  விருது வழங்கிய காட்சி 
சாதனையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு திருச்செந்தூர் பேரூராட்சி தலைவர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் பெண்கள் கலைக்கல்லூரி செயலாளரும், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியுமான தாண்டேஸ்வரன், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் முருகன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையை குமரிமாவட்ட புதியபுயல் நிருபர் கண்ணனும், நிகழச்சியி புதியபுயல் ஆசிரியர் ஆறுமுகமும் தொகுத்து வழங்கினர்.
விருது பெற்ற சாதனையாளர்கள், சமூக ஆர்வலர்கள்

2 Comments

  1. இந்த விருது பெற்ற சாதனையாளர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஆகியவர்கலுகு வாழ்த்துக்கள்

    ReplyDelete
Previous News Next News