மணவாளக்குறிச்சி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
27-09-2013
மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). டிரைவர். இவரது மனைவி ஆஷா (45) உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவியின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் மனமுடைந்த ராஜேந்திரன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சதாசிவம், ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Post a Comment

Previous News Next News