மணவாளக்குறிச்சி, பரப்பற்று பகுதியில் இருந்து திருச்செந்தூர் முருகன்
கோவிலுக்கு பறக்கும் காவடி சென்றது
17-08-2013
மணவாளக்குறிச்சி, பரப்பற்று பகுதியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பறக்கும் காவடி சென்றது. பரப்பற்று மணக்காட்டுவிளை சிவசக்தி கலாமன்றம் சார்பில் மன்றத்தின் 22-வது ஆண்டுவிழாவும், திருச்செந்தூர் முருகனுக்கு காவடி கட்டும் விழாவும் 16, 17-ம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றன.
16-ம் தேதி நடைபெற்ற விழாவில் காலை 5 மணிக்கு காவடி தீபாராதனை, காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்வும் நடைபெற்றது. பா.ஜ.க. வர்த்தக அணி ஒன்றிய தலைவர் முருகன் கொடியேற்றினார். மாலை 5.30 மணிக்கு மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன் தாய்விளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜையை துவங்கி வைத்தார். மாலை 6.30 மணிக்கு நையாண்டிமேளமும், இரவு 7 மணிக்கு வேல்தரித்தலும் நிகழ்ந்தன. இரவு 9 மணிக்கு திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
17-ம் தேதி நிகழ்வில் காலை 5 மணிக்கு காவடி கட்டுதலும், 6.30 மணிக்கு காவடி தீபாராதனையும், 7 மணிக்கு காவடி பவனி வருதலும் நெடைபெற்றது. பகல் 12 மணிக்கு கல்லடிவிளை ஸ்ரீபகவதி செண்டைமேளம் நடத்தப்பட்டது. பகல் 1.30 மணிக்கு பறக்கும் தொட்டில் காவடிகள், ஆறடி வேல் காவடி மற்றும் புஷ்பக்காவடி புறப்பட்டது. பரப்பற்றிலிருந்து புறப்பட்டு பிள்ளையார்கோவில், படர்நிலம், மண்டைக்காடு, கூட்டுமங்கலம், மணவாளக்குறிச்சி, வெள்ளமடி வழியாக திருச்செந்தூர் சென்றது
செய்தி மற்றும் போட்டோஸ்
புதியபுயல் முருகன்
மணவாளக்குறிச்சி