மணவாளக்குறிச்சி மணல் ஆலை சார்பில்
பேரூராட்சிக்கு டாட்டா மினி வாகனம்
09-06-2013
மணவாளக்குறிச்சி மணல் ஆலை சார்பாக மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் வீடுகளில் தேங்கும் திடக்கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்துவதற்கு டாட்டா மினி வாகனம் மற்றும் பிளாஸ்டிக் கூடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மணல் ஆலை தலைவர் மொகபத்ரா வாகனத்தை வழங்கினார். பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா, செயல் அலுவலர் ராமசாமி ஆகியோர் பெற்று கொண்டனர்.
விழாவில் துணை பொது மேலாளர் செல்வராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். பின்னர் மணல் ஆலை தலைவர் மொகபத்ரா பேசுகையில், “மணல் ஆலை நிறுவன சமூகப் பொறுப்பின் கீழ் மேற்கண்ட மினி வாகனம் மற்றும் பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட்டது” என்றார்.
Tags:
Manavai News