திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா வலியுல்லா தர்ஹா
ஆண்டு விழா நடைபெற்றது
09-06-2013
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தர்ஹாக்களில் ஒன்றான திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா வழியில்லா தர்ஹா ஆண்டு விழா 28-05-2013 அன்று தொடக்கி 07-06-2013 வரை (ஹிஜ்ரி 1434 ஆண்டு ரஜப் பிறை 17 முதல் 27 வரை) நடைபெற்றது.
திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா தர்ஹா |
28-05-2013 முதல் 05-06-2013 வரை தினமும் இரவு 7 மணிக்கு மௌலூது ஓதுதல் நிகழ்வும், தொடர்ந்து நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 05-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் (9-ம் நாள்) இரவு 9 மணிக்கு ஆன்மிக அருளிகை முரசு நெல்லை புகழ் அல்ஹாஜ் பரக்காத் ஹக்கியூல் காதிரி குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.
6-ம் தேதி (10-ம் நாள்) நிகழ்ச்சியில் பிற்பகல் 12 மணிக்கு பிறைகொடி தாங்கிய யானை ஊர்வலம் புறப்பட்டது. இரவு 8 மணிக்கு திருக்கொடியேற்று நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேருரை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இஸ்லாமிய இன்னிசை கச்சேரியில் பாடிய தாஜுதீன், பெரோஸ்கான் மற்றும் கண்ணூர் ஜீனத் |
மார்க்க பேருரை நிகழ்ச்சியில் “திருமறையும், திருநபியும்” என்ற தலைப்பில் கீழக்கரை மௌலவி குலாம் முஹைதீன் உருஸி மற்றும் திருநெல்வேலி ஆர்.ஜே.கல்லூரி தலைவர் எம்.ஹீமாயூன் கபீர் உஸ்மானி ஆகியோர் சிறப்பரை வழங்கினர்.
இன்னிசை கச்சேரியை காணவந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி |
7-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் காலையில் தப்றூக் எனும் நேர்ச்சை வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு கேரள ஏசியா நெட், கைரளி தொலைக்காட்சி, ஹல்பானு பாத்திமா புகழ் வடகரை தாஜுதீன், கண்ணூர் ஜீனத், பட்றுமால் சித்தாரா, பெரோஸ்கான், கண்ணூர் ஷமீர் மற்றும் ஷெரீப் ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் “இஸ்லாமிய இன்னிசை கச்சேரி” நடைபெற்றது.
விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்ஹா நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
படங்கள்:
சரபுதீன், திட்டுவிளை
Tags:
District News