அம்மாண்டிவிளையில் உழவர் பெருவிழா விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்பட்டது
11-05-2013
குருந்தன்கோடு வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் உழவர் பெருவிழா நடைபெற்றது. சென்னிமலை பேரூராட்சி உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் இரண்டு மடங்கு உற்பத்தி மற்றும் மூன்று மடங்கு வருமானம் பெறுவதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்பங்கள் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட்டது. மேலும் விவசாயி ஒருவருக்கு வேளாண்மைத்துறை மூலம் கதம்பை தூளை இயற்கை உரமாக எளிதில் மக்க செய்யும் புளுரோட்டஸ்பை வழங்கப்பட்டது.
முகாமில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சையது அகமது மீரான், குருந்தங்கோடு வட்டார உதவி இயக்குனர் அவ்வை மீனாட்சி, பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜெயின் சுஜாதா, தோட்டக்கலை துறை அலுவலர் உதவி இயக்குனர் கண்ணன், வேளாண் பொறியியல் துறை அலுவலர் எட்வின் சாமுவேல், வணிகத்துறை உதவி வேளாண் அலுவலர் தங்கராஜூ, வேளாண் அலுவலர் சந்திரபோஸ், துறை அலுவலர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மண் பரிசோதனை செய்வதற்கு விவசாயிகளிடமிருந்து மண் மாதிரி பெறப்பட்டது. அனைவருக்கும் விவசாயிகள் கையேடு வழங்கப்பட்டது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்