குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அதிரடி நீக்கம் ஜெயலலிதா உத்தரவு

குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அதிரடி நீக்கம் ஜெயலலிதா உத்தரவு
18-04-2013
கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி கட்சி தலைமை, அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, நாகர்கோவில் எம்.எல்.ஏ.,வான நாஞ்சில் முருகேசனை மாவட்ட செயலாளராக நியமித்தது. 

இந்நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டு, அ.தமிழ்மகன் உசேன் மாவட்ட கட்சிப்பணியை கூடுதலாக கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் நாஞ்சில் ஏ.முருகேசன் எம்.எல்.ஏ. நேற்று (17ந்தேதி) முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கட்சிப் பணிகளை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் கூடுதலாக மேற்கொள்வார். கட்சியினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

Post a Comment

Previous News Next News