தக்கலை அருகே பேருந்து மோதி 2 வாலிபர்கள் பலி

தக்கலை அருகே பேருந்து மோதி 2 வாலிபர்கள் பலி
18-04-2013
தக்கலை அருகே உள்ள முளகுமூடு முகமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் சேவியர் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் ஆலிவர் (31). நண்பர்களான இருவரும் கட்டிட தொழிலாளிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் நேற்று காலை நாகர்கோவிலில் கட்டிட வேலைக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
ஆலிவர் மற்றும் பெலிக்ஸ் சேவியர்
தக்கலை அருகே புலியூர்குறிச்சி தேவசகாயம் பிள்ளை ஆலயம் பகுதியில் வந்த போது எதிரே நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த எல்.எஸ்.எஸ். அரசு பஸ் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பெலிக்ஸ் சேவியர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆலிவர் படுகாயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெலிக்ஸ் சேவியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவரான நட்டாலத்தை சேர்ந்த ஏசுதாஸ் (39) என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் பலியான பெலிக்ஸ் சேவியரின் மனைவி உஷா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவர் இறந்த தகவல் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த அவர் கதறி அழுதது பார்ப்பவர்கள் மனதை உலுக்கியது. விபத்தில் பலியான ஆலிவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
Thanks To Dailythanthi

Post a Comment

Previous News Next News