நாகர்கோவிலில் பிரமிடு பொருட்காட்சி
16-04-2013
குமரி மாவட்ட மக்கள் கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட ஆண்டுதோறும் நாகர்கோவில் பொருட்காட்சி மைதானத்தில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு குமரி மாவட்ட மக்கள் வியப்படையும் வகையில் தாஜ் மகால் அமைக்கப்பட்டு பொருட்காட்சி நடத்தப்பட்டது. இந்த பொருட்காட்சியை மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களித்தனர்.
அதே நிறுவனமானது இந்த ஆண்டு உலக அதிசயத்தின் ஒன்றான எகிப்து பிரமிடு போல் அமைத்து பொருட்காட்சியை நடத்த முடிவு செய்தது. இதையடுத்து நாகர்கோவில் பொருட்காட்சி மைதானத்தில் பிரமாண்ட பிரமிடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. 65 அடி உயரத்தில் பிரமிடு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பிரமிடு கோபுரத்தில் வெளிப்புறம் எகிப்தில் இருப்பது போன்று தோற்றங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 120-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக இந்த பணி நடந்து வருகிறது. பொருட்காட்சியில் 100-க்கு மேற்பட்ட ஸ்டால்களும் குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெறுகிறது.
இந்த பிரமிடு பொருட் காட்சியானது வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டும் குமரி மாவட்ட மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இது திகழும் என்று பொருட்காட்சியை நடத்துபவர்கள் தெரிவித்தனர்.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்