மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 3–ம் நாள் காட்சிகள்
06-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 3–ம் நாள் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-
காலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி |
மாநாடு பந்தலில் காலை 8 மணிக்கு பஜனையும், 10 மணிக்கு மகாபாரத ஆன்மீக தொடர் விளக்க உரையும், 12 மணிக்கு சமய மாநாடு நிகழ்ச்சியும், பிற்பகல் 2.30 மணிக்கு ஸ்ரீ லளிதா ஸ்கஸ்ரநாம மாத்ரு சக்தி பூஜையும் நடைபெற்றது. இரவு 6 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.
பரதநாட்டிய ஒருங்கிணைப்பாளருக்கு பொன்னாடை அணிவித்த ஹைந்தவ சேவா சங்க தலைவர் கந்தப்பன் |
யானை பவனி ஊர்வலம் |
சமய மாநாடு நடைபெற்ற காட்சி |
கதகளி நிகழ்ச்சிக்கு முன் தொடக்க நிகழ்ச்சியாக செண்டை மேள காட்சி |
இரவு 7 மணிக்கு பரதாலயா பவுண்டேசன் வழங்கிய பரத நாட்டியம் கலை நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணிக்கு கேரள மாநிலம் வக்கம் நரேந்திரன் நாயர் வழங்கிய கதகளி நிகழ்ச்சி நடந்தது.
யானை பவனி மற்றும் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வீடியோ காட்சி
கதகளி வீடியோ காட்சி