மணவாளக்குறிச்சி பகுதியில் சப்–இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக அ.தி.மு.க.பேரூர் செயலாளர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி பகுதியில் சப்–இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக 
அ.தி.மு.க.பேரூர் செயலாளர் மீது வழக்கு
12-02-2013
மணவாளக்குறிச்சி அருகே சப்–இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக அ.தி.மு.க. பேரூர் செயலாளர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

மணவாளக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் ரோந்து சென்றனர். மணவாளக்குறிச்சி ஆற்றின்கரை அருகே போலீசார் சென்றபோது ஒருவர் சாலையோரம் நின்ற மின்கம்பத்தில்மோதி மயங்கி கிடப்பதை கண்டனர். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
அப்போது மணவாளக்குறிச்சி அ.தி.மு.க.பேரூர் செயலாளர் கண்ணதாசன் அங்கு வந்தார். அவர் ரோந்து போலீசாரிடம் தகாதவார்த்தை பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பனுக்கும், கண்ணதாசனுக்கும் வாய்த்தகராறும் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன், மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரில், மணவாளக்குறிச்சி அ.தி.மு.க. பேரூர் செயலாளர் கண்ணதாசன் தன்னை அவதூராக பேசி, கொடில மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி சப்–இன்ஸ்பெக்டர் சத்தியவாணிமுத்து விசாரணை நடத்தி, கண்ணதாசன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகிறார்.

Post a Comment

Previous News Next News