கௌரவக் கொலைகள் இனி வேண்டாம்
11-12-2012
இந்தியாவில் தற்பொழுது கௌரவக் கொலைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கௌரவக்கொலை செய்யப்போகிறவர்களே ஒரு நிமிடம் உங்களைப்பற்றி சிந்தித்து விட்டு கொலை செய்யப் போனீர்களானால் நீங்கள் கொலை செய்ய மாட்டீர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் உடனடி இறந்து விடுவார்கள், அதற்கு பிறகு உங்கள் நிலை என்ன தெரியுமா?
சமீபத்தில் நடந்த ஒரு கௌரவக் கொலையின் சில பாதகங்களை இதோ உங்கள் முன் வைக்கிறேன். ஒரு முஸ்லீம் பெண் ஒரு இந்து வாலிபனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். பெண்ணின் சகோதரர்கள் ஐந்து பேர் அந்த வாலிபனை கொலை செய்தார்கள், வாலிபன் செத்து விட்டான், அந்த பெண் ஒரு குழந்தையுடன் விதவையாகி விட்டாள். இனி அவளுடைய வாழ்க்கை கேள்வி குறி கௌரவ கொலை செய்த அந்த ஐந்து பேரின் நிலை என்ன? சிந்திப்பீர்!
காவல்துறையிடம் சிக்காமல் இருப்பார்களா? சிக்கிக்கொண்டார்கள் இப்பொழுது சிறையில் வாடுகிறார்கள். சிறையில்சென்ற இளைஞர்களே உங்கள் கௌரவம் இப்பொழுது குறைந்து விட்டதா கூடி விட்டதா? சிந்தித்து பாருங்கள். ஒன்றுக்கும் உதவாத ஒரு மதத்தின் பெயரால் உங்கள் வாழ்க்கையே வீணாக்கி விட்டீர்களே. இதுதான் உங்கள் கௌரவமா? இளைஞர்களே சிந்தியுங்கள்.
கண்ணுக்கே தெரியாத கடவுளை, இன்று வரை யாரும் பார்த்திராத கடவுளை, மதத்தின் பெயரால் நோகடிக்கலாமா.இந்து ஆனாலும் முஸ்லீம் ஆனாலும் கடவுளுக்கு இருவரும் ஒன்று தான். யாருடைய நெற்றியில் ஆவது கடவுள் நீ இந்து என்றும் நீ முஸ்லீம் என்றும் எழுதி ஒட்டி அனுப்பினாரா. அல்லது உங்கள் நெற்றியில் ஒட்டியிருக்கிறதா? இளைஞர்களே சிந்திப்பீர்.
திடீரென்று ஒரு வாகன விபத்து நடக்கிறது. வாகனத்தை இடித்தவன் இந்துவா முஸ்லீமா? அடிப்பட்டவன் இந்துவாமுஸ்லீமா? அடிப்பட்டவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்லும் இரண்டு பேர் இந்துவா முஸ்லீமா? ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸை ஓட்டுபவன் இந்துவா முஸ்லீமா? வைத்தியம் பார்த்த டாக்டர் இந்துவா முஸ்லீமா? ரத்தம் தந்தவர்கள்இந்துவா முஸ்லீமா? ஆஸ்பத்திரியிலுள்ள நர்ஸ்கள் இந்துவா முஸ்லீமா? விசாரணைக்கு வரும் காவல்துறையினர்இந்துவா முஸ்லீமா.
இவற்றிற்கு ஒன்றும் இந்துவா முஸ்லீமா என்று பார்க்காத போது திருமணத்தில் மட்டும் இந்து, முஸ்லீம் வேறு பாடுபார்க்கலாமா. இன்றைய புத்திசாலி இளைஞர்களே சிந்திப்பீர். இனி கௌரவக் கொலைகள் வேண்டாம்.
06.08.2012
Tags:
Other News