கருங்கல் அருகே குழந்தையுடன் மாயமான பெண்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதாக பிடிவாதம்

கருங்கல் அருகே குழந்தையுடன் மாயமான பெண்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதாக பிடிவாதம்
19-12-2012
கருங்கல் அருகே உள்ள மிடாலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சுமிதா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அபிநயா (4 1/2) என்ற மகள் உள்ளார். தற்போது ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை அபிநயாவுடன் தாய் வீட்டுக்கு செல்வதாக மாமியார் சரோஜாவிடம் கூறி விட்டு சென்ற சுமிதா குழந்தையுடன் மாயமாகி விட்டார். இதுபற்றி கருங்கல் போலீசில் சரோஜா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான சுமிதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கருங்கல் போலீஸ் நிலையத்திற்கு சுமிதா சென்று ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, செல்போன் மிஸ்டு கால் மூலம் ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், கோவையைச் சேர்ந்த அந்த வாலிபருடன் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருவதாகவும், அவருடனேயே வாழ விரும்புவதாகவும் கூறினார். மேலும் குழந்தை அபிநயாவை உறவினர் வீட்டில் விட்டு சென்றதாகவும் சுமிதா கூறினார்.
இதை தொடர்ந்து சுமிதாவை இரணியல் கோர்ட்டில் போலீசார் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுமிதாவை பள்ளியாடியில் உள்ள அவரது சித்தியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சித்தியுடன் சுமிதா சென்றார்.

Post a Comment

Previous News Next News