ஆசியா முழுவதும் ஒரே கரன்சி
04-12-2012
அமெரிக்கா டாலரை உலகம் முழுவதும் பயன் படுத்தி வருவதால் தான், அமெரிக்காவை அனைத்து நாடுகளும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. டாலரின் மதிப்பு சரியும்போது அனைத்து நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகிறது.
ஆசியாவிலுள்ள ரஷ்ய, சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சவூதி அரேபியா, துருக்கி, கசக்ஸ்தான், மங்கோலியா, போன்ற அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ஒரு பொது கரன்சியை வெளியிட வேண்டும்.
பெட்ரோல் வளம் உட்பட ஆசிய கண்டத்தில் இல்லாத எந்தப் பொருளும் கிடையாது. எனவே ஆசியாவிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ஒரு பொது கரன்சியை வெளியிட்டால், பொருளாதார சரிவிலிருந்து மீண்டு அனைத்து நாடுகளும் வேகமாக முன்னேற முடியும். ஆசியா நாட்டிலுள்ளவர்களே ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் வாருங்கள்.
Tags:
Other News