15 வயதில் பட்டம்

15 வயதில் பட்டம்
04-12-2012
இந்தியாவில் சுமார் 60 ஆண்டு காலத்திற்கு முன் உள்ள கல்வி நடைமுறையே இப்பொழுதும்   செயலாக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 65 ஆண்டுகளில் வேகமான வளர்ச்சி கண்டுள்ளது. அந்த காலத்தில் பள்ளிக்கு சென்றவர்களே மிகவும் குறைவாக காணப்பட்டனர்.

இன்றைய நவீன இந்தியாவில் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் பள்ளிக் கூடங்கள், பதினாயிரக்கணக்கில் கல்லூரிகள், ஆயிரக் கணக்கில் பல்கலைக் கழகங்கள். 5 கோடி பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்ட பிறகும் பழைய காலகல்வி முறையே தற்பொழுதும் நடைமுறைப் படுத்துவது நாட்டுக்கு நல்லது அல்ல.

நவீன காலத்தில் LKG முதல் பட்டப்படிப்பு வரை 19 ஆண்டுகள், இக்கால இளைஞர்களை கல்வி நிலையங்களில் முடங்கச்செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக காணப்படுகிறது. உலகத்தையே செல்போனுக்குள் அடைத்து தன் உள்ளங்கைக்குள் இயக்கும் திறமை வாய்ந்த வாய்ந்த இளைஞர்களை 19 ஆண்டுகள் கல்விக் கற்கச் செய்வது மிகவும் கூடுதலாகும்.
எனவே நவீன காலத்திற்கேற்ப கல்வி கற்கும் ஆண்டை 19- லிருந்து 10 ஆக குறைக்க வேண்டும். 7 ஆண்டுகள் பள்ளிகளிலும் 3 ஆண்டுகள் கல்லூரிகளிலும் படித்து பட்டம் பெறும் வண்ணம்   மாற்றம் செய்ய வேண்டும் ஒற்றுமையாய் குரல் கொடுப்ப்போம் வாருங்கள். அரசே கல்வி கற்கும் ஆண்டை 10 ஆக குறைத்து 15 வயதிற்குள் இளைஞர்களுக்கு பட்டம் வழங்கிடுக.
என்றென்றும் மகிழ்வுடன்ஸ்ரீஹரி

Post a Comment

Previous News Next News