மணவாளக்குறிச்சியில் மாருதி வேன் மோதி பெண் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

மணவாளக்குறிச்சியில் மாருதி வேன் மோதி
பெண் தூக்கி வீசப்பட்டு படுகாயம்
21-12-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் துரை வின்சென்ட். இவருடைய மனைவி லீலா (வயது 58). இவர் இன்று மாலை 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி அந்தி சந்தையில் இருந்து மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொண்டு மணவாளக்குறிச்சியில் இருந்து பிள்ளையார்கோவில் செல்லும் சாலையில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
பெண் மீது மோதிய வேனை படத்தில் காணலாம்
அப்போது மணவாளக்குறிச்சி வழியாக ஒரு மாருதி வேன் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த வேனை பெண் ஒருவர் ஒட்டி வந்ததாக கூறப்படுகிறது. வேன் மணவாளக்குறிச்சியில் உள்ள சிவா ஆஸ்பத்திரி அருகே வரும் போது, திடீரென் 'பிரேக்' போட்டதால் நிலை தடுமாறி ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த லீலா மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. 

இதில் லீலா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் லீலா படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் வாங்கி கொண்டு சென்ற மீன்கள் மற்றும் பொருட்கள் சாலையில் ஓரத்தில் சிதறி விழுந்தது. மோதிய வேன் நாகர்கோவில் பகுதியை சேர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் வேனை ஒட்டி வந்தவர் வேனில் இருந்து இறங்கி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வேனை ஓட்டியவர் பிரேக் பிடித்ததால் ரோட்டில்
ஏற்பட்ட சக்கர  தடம்
உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஈத்தாமொழியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
லீலா வாங்கிய நெத்திலி மீன்கள் சிதறி கிடந்த காட்சி
தற்போது மணவாளக்குறிச்சி பகுதியில் ரோட்டின் ஓரத்தில் நடந்து செல்பவர்கள் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோட்டில் நடந்து சென்ற மணவாளக்குறிச்சி தருவையை சேர்ந்த ராமு என்பவரை அரசு பேருந்து மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரோட்டின் ஓரத்தில் நடந்து செல்வதற்கும் பயமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறியதை கேட்கமுடிந்தது.

Post a Comment

Previous News Next News