மணவாளக்குறிச்சி, தருவை பகுதியில் 3 நாட்களாக மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

மணவாளக்குறிச்சி, தருவை பகுதியில் 
3 நாட்களாக மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
21-12-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவை பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு மின்சாரம் தடைபட்டிருந்த நேரத்தில், அப்பகுதியை சேர்ந்த ராஜமணி என்பவருக்கு சொந்தமான டிம்போ வாகனம் அங்குள்ள ஒரு பாதையில் திரும்பி செல்லும்போது, அருகில் இருந்த மின்சார தூணில் உரசியது. இதனால், மின்சார தூண் முறிந்தது.
முறிந்து விழுந்த 2-வது மின்சார தூண்
இதனை தொடர்ந்து அந்த தூணில் இருந்த மின்கம்பிகள் இழுந்து வந்ததால், அடுத்து நின்ற மின்சார தூணும் முறிந்து விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து ரோட்டில் விழுந்தது. அந்த வேளையில் மின்சாரம் தடைபட்டு இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
டிம்போ வாகனம் மோதிய மின்சார தூண் இருந்த இடம்.
மின்சார வாரிய ஊழியர்களால் நேற்று அப்புறப்படுத்தப்பட்டது 
இதனால், அந்த பகுதி முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் மின்தடை ஏற்பட்டது. நேற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து உடைந்த மின்கம்பன்களை அப்புறப்படுத்தினர். அறுந்து விழுந்த மின்கம்பிகளை பக்கத்தில் உள்ள மின்சார தூணில் கட்டிவைத்துவிட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று இரவும் மக்கள் இருட்டில் தவித்தனர்.
அறுந்து விழுந்த கம்பிகள் மற்றொரு
தூணில் கட்டப்பட்டுள்ளது. இந்த தூண்
சாலையின் நடுப்பகுதியில் நிற்பதை காணலாம்.
இன்று புதியதாக மின்சார தூண்கள் நட்டப்பட்டு, மின்கம்பிகள் கட்டப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Post a Comment

Previous News Next News