மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

மணவாளக்குறிச்சி, சின்னவிளை
புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
25-12-2012
மணவாளக்குறிச்சி, சின்னவிளையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
St. Antony Church, Cinnavilai, Manavalakurichi.
நேற்று இரவு 11 மணி அளவில் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இரவு நேர சிறப்பு ஜெபத்தை அருட்தந்தை பெஞ்சமின் போஸ்கோ மற்றும் அருட்தந்தை அகஸ்டின் பீட்டர் ஆகியோர் நடத்தினர்.
சின்னவிளை ஆலயம் இரவு நேரத்தில் ஜொலிக்கும் காட்சி
கிறிஸ்துமஸ் சிறப்பு ஜெபத்தில் கலந்து கொண்டவர்கள்
கிறிஸ்துமஸ் பிரார்த்தனை இரவு சுமார் 1.30 மணி அளவில் நடந்தது. தொடர்ந்து செண்டைமேளம் மற்றும் சிங்காரிமேள நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து  ஒருவரைக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர்.
செண்டைமேள காட்சி நடந்த காட்சி
வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்

Post a Comment

Previous News Next News