வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 54-வது கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சி


வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்
54-வது கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சி
19-11-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 54-வது கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சி நவம்பர் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. 18-ம் தேதி நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில் சூராசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சியும், 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணி பஜனை நிகழ்ச்சியும், 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை சுந்தரபுராண தொடர் விரிவுரையும், பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாதஸ்வர நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து 2 மணி முதல் மாலை 4 மணி வரை கேரளா புகழ் பாறசாலை திரு. ராஜன் குழுவினர் வழங்கிய "மைலேந்திகாவு" சிங்காரிமேளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெடர்த்து. மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.. தொடர்ந்து 6.30 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலாவருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை காட்சியும் நடைபெற்றன.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

Previous News Next News